search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னுடைய உத்தரவுக்கு தடையா: நீதிபதி மீது டிரம்ப் பாய்ச்சல்
    X

    என்னுடைய உத்தரவுக்கு தடையா: நீதிபதி மீது டிரம்ப் பாய்ச்சல்

    7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு கோர்ட்டு விதித்த இடைக்கால தடையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.

    மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு சில கோர்ட்டுகள் இடைக்கால தடை விதித்துள்ளன.

    இந்நிலையில், 7 நாட்டு முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த இடைக்கால தடையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அரசின் அதிகாரமிக்க ஆணையின் மீது நீதிபதிகள் அதிகாரம் செலுத்துவது கேலிக்குரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். 

    அமெரிக்காவின் சியாட்டல் மாவட்ட கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ரோபர்ட் நேற்று டிரம்ப் உத்தரவிற்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×