search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு என்.ஜி.ஓ-களுக்கு நிதி குறைக்க திட்டம்: அதிபர் டிரம்ப்
    X

    வெளிநாட்டு என்.ஜி.ஓ-களுக்கு நிதி குறைக்க திட்டம்: அதிபர் டிரம்ப்

    வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நிதியை குறைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவர் 45வது அதிபராக கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றார்.

    இந்நிலையில், வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டும் நிதியை குறைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    முன்னதாக அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் பல்வேறு கோப்புகளில் முதற்கட்டமாக கையெழுத்திட்டார். டிரான்ஸ் பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.  இது முன்னாள் அதிபர் பராக் ஓபாமாவால்
    ஏற்படுத்தப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள்  இருக்கின்றனர். ஆனால் சீனா இதில் இருந்து வெளியே இருக்கிறது.

    Next Story
    ×