search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருமகனை ஆலோசகராக டிரம்ப் நியமித்தது சரியே: அமெரிக்க சட்டத்துறை அறிவித்தது
    X

    மருமகனை ஆலோசகராக டிரம்ப் நியமித்தது சரியே: அமெரிக்க சட்டத்துறை அறிவித்தது

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற 'டொனால்டு டிரம்ப் தனது மருமகனை வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமித்தது சரியே’ என அமெரிக்க சட்டத்துறை அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் (70) கடந்த 20-ந் தேதி பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக தனது காபினெட் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்தார்.

    அப்போது வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக ஜாரெட் குஷ்னரை நியமித்தார். அவர் டிரம்பின் மகள் இவாங்காவின் கணவர். அதாவது டிரம்பின் மருமகன் ஆவார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசு பதவிகளில் உறவினர்களை நியமிப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டது. எனவே, பதவி ஏற்றவுடன் இது குறித்து புதிதான நியமிக்கப்பட்ட சட்ட துறையிடம் அதிபர் டிரம்ப் கருத்து கேட்டார்.

    இது குறித்து அரசு துணை அட்டர்னி ஜெனரல் டேனியல் கோப்ஸ்சி 14 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 1967-ம் ஆண்டு சட்டப்படி அரசு பதவிகளில் உறவினர்கள் நியமிக்கப்படலாம் என உள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு ஜான் கென்னடி தனது சகோதரர் ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரல் ஆக நியமித்துள்ளார். 1978-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, அதிபர் டிரம்ப் தனது மருமகன் ஜாரெட் குஷ்னரை (35) வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமித்தது சரியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×