என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலியல் அத்துமீறல் - தவறான விமர்சனம் : டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு
Byமாலை மலர்18 Jan 2017 6:02 AM GMT (Updated: 18 Jan 2017 6:02 AM GMT)
வேலை கேட்டு வந்த பெண்ணை அத்துமீறி முத்தமிட்டு, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டை இழிவான முறையில் விமர்சித்த டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை ஓரினச் சேர்க்கைப் பிரியர் என அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் கூறிவந்தார்.
டொனால்ட் டிரம்ப் ஒரு சரியான பெண்பித்தர் என ஹிலாரி குற்றம்சாட்டி வந்தார். இவை ஊடகங்களுக்கு பெருந்தீனியாக அமைந்தன. குறிப்பாக, டிரம்ப் மீது கடந்த ஆண்டில் பத்துக்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அவர் மீது பாலியல் குற்றம்சாட்டியவர்களில் ஒருவரான சம்மர் ஸெர்வோஸ் என்பவர், வேலை கேட்டு சென்ற தன்னை டிரம்ப் பலவந்தமாக கட்டியணைத்து முத்தமிட்டதாகவும், மார்பகங்களை பிடித்து, கட்டிலில் தள்ளி கற்பழிக்க முயன்றதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்த டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அந்தப் பெண்ணை தகாத முறையில் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் கருத்தால் தனது கவுரவமும், நன்மதிப்பும் வெகுவாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சம்மர் ஸெர்வோஸ், டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்கு டிரம்ப் வருத்தம் தெரிவிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என நேற்று அவர் தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த வழக்கு தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×