search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலைய தாக்குதல் - பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
    X

    விமான நிலைய தாக்குதல் - பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை

    சிரியாவின் டமஸ்கஸ் நகரில் ராணுவ விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது
    டமஸ்கஸ்:

    இஸ்ரேல் நாட்டில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மெஸ்ஸே ராணுவ விமான நிலையம் அருகே விழுந்து வெடித்தது.

    சிரிய அரசின் தேசிய செய்தி நிறுவனமான சனா இந்த தகவலை நேற்று தெரிவித்து இருந்தது.

    சிரியாவில் அரசுக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் இவ்வாறு அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிரியா அரசு இந்த கண்மூடித்தனமான தாக்குதலை பொருட்படுத்தாமல் கிளர்ச்சி குழுக்களுக்கு எதிரான எங்களது நடவடிக்கை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

    இஸ்ரேலின் தாக்குதலால் மெஸ்ஸே ராணுவ விமான நிலையம் அருகேயுள்ள சில பகுதிகள் தீப்பற்றி எரியும் காட்சிகளை சிரியா ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

    ராணுவ விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது:

    தீவிரவாத அமைப்புகளின் உதவியுடன் இஸ்ரேல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சிரிய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    ஆனால் இஸ்ரேலிய அரசு இதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
    Next Story
    ×