search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப்பைன்சை நெருங்கும் நாக்-டென் புயல்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
    X

    பிலிப்பைன்சை நெருங்கும் நாக்-டென் புயல்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

    பிலிப்பைன்சின் கிழக்குப் பகுதி தீவை 185 கிலோ மீட்டர் வேகத்தில் நாக்-டென் என்ற புயல் தாக்க உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்
    ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய கத்தோலிக்க நாடு பிலிப்பைன்ஸ். இந்த நாட்டின் கடான்டுயானஸ் மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட தயாராகி கொண்டிருந்தார்கள். அப்போது நாக்-டென் என்ற புயல் உருவானது.

    இந்த புயல் இன்று மாலை கடான்டுயானஸ் மாகாணத்தில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த மக்கள் ஆயிரக்கணக்கில் சொந்த இடத்தை விட்டு பாதுக்காப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். இதனால் அவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தடைபட்டு விட்டது.

    150 கி.மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று, கடான்டுயானஸ் மாகாணத்தில் கரையை கடக்கும்போது 255 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுடன் கடுமையான மழையும் பொழியும் என்பதால் மின்சாரம், தகவல் தொடர்புகள் தடைபடும் என அரசு அறிவித்துள்ளது.

    கடான்டுயானஸ் மாகாணத்தில் கரையைக் கடக்கும் புயல் தெற்கு லுசோன் வழியாக தெற்கு சீன கடலை சென்றடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 65 வருடங்களில் 7 முறை கிறிஸ்துமஸ் அன்று சூறாவளி காற்று தாக்கியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×