search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபோன் 7S-ல் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? - புதிய தகவல்
    X

    ஐபோன் 7S-ல் உள்ள சிறப்பம்சங்கள் என்ன? - புதிய தகவல்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7S ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் கசிந்திருக்கின்றன.
    சான்பிரான்சிஸ்கோ:

    2017 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 7S குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது. புதிய ஐபோன் வெளியாகி சில மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் வெளியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு வெளியாக இருப்பவை ஐபோன்களின் பத்தாம் ஆண்டு விழாவை குறிப்பதால் இவற்றின் அம்சங்களில் புதிய மாறுதல்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

    புதிய ஐபோன் 7S ஸ்மார்ட்போனில் OLED திரை, அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் புதிய அளவு வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. சாம்சங் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்படும் OLED திரை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்ப்ளே அளவுகளை பொருத்த வரை ஏற்கனவே இருக்கும் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் இல்லாமல் 5.0 இன்ச், 5.8 இன்ச் வரை மாற்றப்படலாம் என கூறப்படுகின்றது. 

    அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் வளைந்த கிளாஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் முதன்மையாக தெரிவிக்கப்பட்டது. ஐபோன் 7 போனில் மெட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்ட நிலையில் அடுத்து வெளியாகவிருக்கும் ஐபோன் 7S சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    புதிய ஐபோனில் கேமரா அம்சங்களில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகின்றது. ஐபோன் 7S போனில் சிங்கிள் லென்ஸ் கேமராவும், ஐபோன் 7S பிளஸ் டூயல்-லென்ஸ் கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பிரைமரி கேமரா அளவுகளில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இருக்கிறது. செல்ஃபி கேமராவை பொருத்த வரை ஆப்பிள் சமீபத்தில் தான் 7 எம்பி வரை வழங்கியிருக்கிறது. 

    ஐபோன் 7S போனானது ஐஓஎஸ் 11 மற்றும் ஃபியூஷன் சிப்செட் கொண்டு சக்தியூட்டப்படும் என்றும் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த போனின் விலை கிட்டத்தட்ட 649 டாலர் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×