search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை இது தான் : இணையத்தில் லீக் ஆனது
    X

    நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை இது தான் : இணையத்தில் லீக் ஆனது

    நோக்கியா நிறுவனம் மீண்டும் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் புதிய நோக்கியா பிராண்டிங் ஸ்மார்ட்போன்களின் விலை இணையத்தில் கசிந்திருக்கிறது.
    பீஜிங்:

    நோக்கியா பிராண்டிங் கொண்ட மொபைல் போன்களை வெளியிட எச்எம்டி குளோபல் தயாராகி வருகிறது என அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான அர்டோ நியூமெல்லா உறுதி செய்திருக்கிறார். ஏற்கனவே நோக்கியா பிராண்டிங் கொண்டு வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் பீச்சர்போன் குறித்த அம்சங்கள் இணையத்தில் பலமுறை கசிந்திருக்கின்றன. 

    இம்முறை புதிய நோக்கியா பிராண்டிங் ஸ்மார்ட்போன்களின் விலை முதல் முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. அதன் படி நோக்கியா D1C இரு மாடல்களில் வெளியாகும் என்றும் 2GB ரேம் கொண்ட D1C விலை 150 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,111 என்றும், 3GB ரேம் கொண்ட D1C ஸ்மார்ட்போன் 200 டாலர்கள் அதாவது ரூ.13,481 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நோக்கியா D1C சாதாரண பதிப்பு சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2GB ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும். மற்றொரு பதிப்பு D1C ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 3GB ரேம் மற்றும் 16 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    மேலும் நோக்கியா D1C ஸ்மார்ட்போன்களின் ஒரு பதிப்பு மெட்டல் ஃபிரேம் மற்றும் பாலிகார்பனைட் பேக்பேனல் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேக்பேனல் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. நோக்கியா D1C பிரீமியம் மாடல் போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் கோல்டு நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரிவி்க்கப்பட்டுள்ளது. 

    மற்ற அம்சங்களை பொருத்த வரை 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 16GB இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா D1C ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×