search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் இந்தியாவில் வெளியீடு
    X

    சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் இந்தியாவில் வெளியீடு

    இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவில் ப்ளூ கோரல் நிறம் கொண்ட கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ட்போனுடன் புதிய பிளாக் பியர்ல் நிறம் கொண்ட மாடல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ப்ளூ கோரல் நிறம் கொண்ட கேலக்ஸி S7 எட்ஜ் விலை ரூ.50,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதோடு இவற்றின் விற்பனை சாம்சங் இணையத்தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கேலக்ஸி S7 எட்ஜ் ப்ளூ கோரல், பிளாக் ஓனிக்ஸ் மற்றும் கோல்டு பிளாட்டினம் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் டூயல்-எட்ஜ் வளைந்த OHD சூப்பர் AOMLED டிஸ்ப்ளே மற்றும் எக்சைனோஸ் 8890 ஆக்டாகோர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 

    மெமரியை பொருத்த வரை 4GB ரேம், 32GB மற்றும் 128GB இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமரா அம்சங்களை பொருத்த வரை சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் பிக்சல் ஆட்டோபோகஸ், PDAF, OIS, f/1.7 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ் ஸ்மார்ட்போனானது 3600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு குவிக் சார்ஜ் 2.0 மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், 4G, LTE, NFC, வைபை மற்றும் GPS வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த சாம்சங் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.
    Next Story
    ×