search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலத்துக்கு வரும் முஹம்மது அலியின் கையுறை, பிடல் கேஸ்ட்ரோவின் சுருட்டு
    X

    ஏலத்துக்கு வரும் முஹம்மது அலியின் கையுறை, பிடல் கேஸ்ட்ரோவின் சுருட்டு

    உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை மற்றும் கியூபாவின் முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளன.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜூலியன்ஸ் என்ற பிரபல ஏல நிறுவனம் உள்ளது. மறைந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் முன்னர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதில் பிரசித்திபெற்ற இந்நிறுவனம் தற்போது குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை மற்றும் கியூபாவின் முன்னாள் அதிபரின் கையொப்பமிட்ட சுருட்டு ஆகியவற்றை ஏலத்தில் முன்வைத்துள்ளது.

    விளையாட்டு துறைசார்ந்த பல பிரபலங்கள் பயன்படுத்திய சுமார் 500 நினைவுப் பொருட்களை ஏலம்விடும் உரிமையை பெற்றுள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் நாளை (சனிக்கிழமை) அவற்றை ஏலத்தில் விட தீர்மானித்துள்ளது.

    இவற்றில், மறைந்த முஹம்மது அலி பயன்படுத்திய கையுறை மட்டும் சுமார் 60 ஆயிரம் டாலர்கள்வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நியூயார்க் அருகேயுள்ள மாடிசன் நகரில் அமைந்துள்ள மாடிசன் ஸ்கொயர் விளையாட்டரங்கத்தில் கடந்த 1970-ம் ஆண்டு இந்த கையுறையை அணிந்துதான் ஆஸ்கர் பொனாவேனா என்ற குத்துச்சண்டை வீரரை முஹம்மது அலி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    1974-ம் ஆண்டு ‘ரம்புல் இன் தி ஜங்குல்’ (Rumble in the Jungle) என்ற குத்துச்சண்டையில் தன்னுடன் மோதிய ஜார்ஜ் போர்மேன் என்பவரை ‘நாக்அவுட்’ செய்து வீழ்த்திபோது அவர் பயன்படுத்திய தாடை காப்பானும் (mouthguard) இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.

    இதேபோல், கடந்த 1998-ம் ஆண்டு மனிதநேய நல்லெண்ணப் பயணமாக முஹம்மது அலி கியூபா நாட்டுக்கு சென்றிருந்தபோது சுருட்டுப்பிரியரான அந்நாள் கியூபா அதிபர் (சமீபத்தில் மரணம் அடைந்த) பிடல் காஸ்ட்ரோ ஒரு அட்டைப்பெட்டி நிறைய சுருட்டுகளை முஹம்மது அலிக்கு அன்பளிப்பாக அளித்திருந்தார்.



    பிடல் காஸ்ட்ரோவின் கையொப்பத்துடன் கூடிய இந்த சுருட்டுகளும் நல்ல விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×