search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன்: புது ஆல்பம் புரமோவுக்காக மொட்டை மாடியில் பாடிய லேடி காகா
    X

    லண்டன்: புது ஆல்பம் புரமோவுக்காக மொட்டை மாடியில் பாடிய லேடி காகா

    பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகா தனது புதிய இசை தொகுப்பை பிரபலப்படுத்துவதற்காக ஆல்பம் லண்டன் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் பாடினார்.
    லண்டன்:

    பாப் இசை உலகில் தற்போது மிகப்பிரபலமான பாடகியாக திகழ்ந்துவரும் லேடி காகா(30) தனது குரலால் மட்டுமின்றி, பிரத்யேக மேக்கப் மற்றும் உடையலங்காரத்தாலும் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

    ’ஜோவன்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது புதிய இசை ஆல்பத்தை பிரபலப்படுத்துவதற்காக லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் ஃபீல்ட் மால் என்ற வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் அவர் தனது ரசிகர்களுக்காக பிரத்யேக ‘ப்ரமோ’ நிகழ்ச்சியை நேற்றிரவு நடத்தினார். சுமார் 60 ரசிகர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த இந்த நிகழ்ச்சியின்போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்ட லேடி காகா, தனது ‘சூப்பர் ஹிட்’ பாடல்களை வெகு உற்சாகமாக பாடி அசத்தினார்.

    பின்னர், தனது ரசிகர்களுடன் செல்பிக்கு போஸ் கொடுத்த லேடி காகா, பணமும் புகழும் மட்டுமே மகிழ்சியான வாழ்க்கையாகி விடமுடியாது. நட்பு, குடும்பம், அன்பு, இரக்க குணம் போன்றவைதான் மகிழ்ச்சிக்கான மூலப்பொருளாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×