search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ஓய்வு: வேதனையில் தொழிற்சங்க தலைவர் தற்கொலை
    X

    பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ஓய்வு: வேதனையில் தொழிற்சங்க தலைவர் தற்கொலை

    பாகிஸ்தானில் ராணுவ தளபதி ஆக பணிபுரிந்த ரகில் ‌ஷரீப் ஓய்வை நீடிக்காததால் கராய்ச்சி தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ராணுவ தளபதி ரகில் ‌ஷரீப் ஓய்வை நீட்டிக்காததால் தொழிற்சங்க தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.

    பாகிஸ்தானில் ராணுவ தளபதி ஆக இருந்தவர் ரகில் ‌ஷரீப் (60). சமீபத்தில் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பொதுவாக பாகிஸ்தானில் ராணுவ தளபதிகளுக்கு பணி ஓய்வு நீட்டிப்பது வழக்கம்.

    ஆனால் ரகில் ‌ஷரீப்புக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதனால் லுப்த் அமீம் ஷிப்லி என்பவர் மனம் உடைந்தார். இவர் கராச்சி துறைமுக கழக தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் ஆவார்.

    ரகில் ‌ஷரீப்புக்கு பதவி நீட்டிப்பு வழங்காததை அறிந்த அவர் கராச்சி பத்திரிகையாளர் சங்கம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    அப்போது அவர் நான் ரகில் ‌ஷரீப்பின் தீவிர ரசிகர், அவர் ஒரு மீட்பர் தீவிரவாதம் மற்றும் சமூக நலிவு போன்றவற்றில் இருந்து அவரால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். எனவே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். தான் உண்ணாவிரதம் இருந்த கூடாரத்தை சுற்றி ரகீல் ‌ஷரீப்பை பாராட்டி வாசகங்கள் எழுதி வைத்திருந்தார்.

    இருந்தும், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் புதிய நீதிபதி பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் வி‌ஷம் குடித்தார் உயிருக்கு போராடிய அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இத்தகவலை அவரது உறவினர் நுரன் தெரிவித்தார்.
    Next Story
    ×