search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிஸ் டூ கானாவிற்கு 3 வாராந்திர நேரடி விமான சேவை: ஏர் பிரான்ஸ் அறிவிப்பு
    X

    பாரிஸ் டூ கானாவிற்கு 3 வாராந்திர நேரடி விமான சேவை: ஏர் பிரான்ஸ் அறிவிப்பு

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து கானா தலைநகர் அக்ராவிற்கு மூன்று வாராந்திர நேரடி விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து கானா தலைநகர் அக்ராவிற்கு மூன்று வாராந்திர நேரடி விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    கானா, நைஜீரியாவிற்கான ஏர்பிரான்ஸ் ஜெனரல் மானேஜர் ஜீன் ரவுல் தயாசின் இதுபற்றி கூறுகையில் ‘‘50 வருடத்தில் தற்போதுதான் முதன்முறையாக இந்த புதிய சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த புதிய சலுகை பயணம் அடுத்த வருடம் பிப்ரவரி 28-ந்தேதி தொடங்க இருக்கிறது.

    இந்த விமானங்கள் கானாவின் தலைநகர் அக்ராவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரை சென்றடையும். வழக்கமாக அக்ராவில் இருந்து புறப்படும் பயணிகள், நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தரையிறங்கி பின்னர் மற்றொரு விமானத்தில் ஏறி பாரிஸ் செல்ல வேண்டும். தற்போது நேரடி விமான சேவை வழங்கப்பட்டிருப்பதால் இந்த வாய்ப்பை இருநாட்டு பயணிகளும் வரவேற்பார்கள்’’ என்றார்.

    இந்த புதிய விமான சேவை திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மார்ச் 27-ந்தேதி வரை 208 இருக்கைகள் கொண்ட A330 என்ற ஏர்பஸ் விமானங்களும், அதன்பின்னர் 312 இருக்கைகள் கொண்ட போயிங் 777-200 விமானங்களும் நேரடியாக இயக்கப்பட உள்ளன. செவ்வாயக்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமானங்கள் இயக்கப்படும்.

    பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 27-ந்தேதி வரை பாரிசில் இருந்து 13.30-க்கு புறப்பட்டு கோடோகா சர்வதேச விமான நிலையத்தை 19.05-க்கு சென்றடையும். அங்கிருந்து 22.25 மணிக்கு அக்ரா புறப்படும். அடுத்த நாள் காலை 6 மணிக்கு பாரிஸ் வந்தடையும்.

    மார்ச் 28-ந்தேதி முதல் பாரிசில் இருந்து 15.30 மணிக்கு புறப்பட்டு 19.50 மணிக்கு அக்ரா சென்றடையும். அதேநாளில் அக்ராவில் இருந்து இரவு 23.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8 மணிக்கு பாரிஸ் வந்தடையும்.
    Next Story
    ×