search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது
    X

    பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது

    பத்திரிகை அட்டைப்படத்தால் உலகப்புகழ் பெற்ற ஆப்கன் அகதி பெண் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்
    பெஷாவர்L:

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஷார்பத் குலா (வயது 44). 1984-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் போர் மூண்டபோது, அவர் 12 வயது சிறுமியாக இருந்தார். போருக்கு நடுவே, அங்கு இருக்க முடியாமல், பாகிஸ்தானுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தவர்களில் அவரும் ஒருவர். பெஷாவர் அருகே ஒரு அகதி முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

    பச்சை நிற கண்களுடன் வித்தியாசமான சிறுமியாக தோன்றிய அவரை ‘நேஷனல் ஜியோகிரபி’ பத்திரிகையின் புகைப்படக்காரர் படம் பிடித்து ‘ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அட்டைப்படத்தில் வெளியிட்டார். அதனால், ஷார்பத் குலா உலகப்புகழ் பெற்றார். வளர்ந்த பிறகு, பாகிஸ்தானியர் ஒருவரை மணந்து கொண்ட ஷார்பத் குலா, 2 குழந்தைகளுக்கும் தாயானார்.

    ஆப்கன் அகதிகள் ஆயிரக்கணக்கானோர், போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானில் தங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஷார்பத்தும் ஒருவர். அதுதொடர்பாக 2014-ம் ஆண்டில் இருந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில், ஷார்பத் நேற்று பெஷாவரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவருடைய 2 குழந்தைகளுக்கும் போலி அடையாள அட்டை வாங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×