search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளின் 26 மாலுமிகள் விடுதலை
    X

    சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளின் 26 மாலுமிகள் விடுதலை

    சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளின் 26 மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
    பீஜிங்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அவர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் வரும் சரக்கு கப்பல், மீன்பிடி கப்பல் உள்ளிட்டவற்றை கடத்தி கப்பல்களில் இருக்கக்கூடிய மாலுமிகளை பிணைக்கைதிகளாக பிடித்து, அவர்கள் மூலம் பிணைத்தொகை வசூலிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    அந்தவகையில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் செசல்ஸ் கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த ஓமன் நாட்டு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் 29 பேரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்தனர். அவர்களில் 10 பேர் சீனாவையும், 2 பேர் தைவானையும் சேர்ந்தவர்கள். இதர 17 பேர் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கடத்தப்பட்ட சில நாட்களில் சீனா மற்றும் தைவானை சேர்ந்த 3 மாலுமிகள் உயிரிழந்தனர். மற்ற 26 மாலுமிகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் ஐ.நா.வுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியோடு சீனா கடற்கொள்ளையர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பயனாக 26 மாலுமிகளும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இதற்காக கடற்கொள்ளையர்களுக்கு பிணைத்தொகை ஏதும் வழங்கப்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

    Next Story
    ×