search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செக்ஸ் புகார் கூறிய பெண்கள் மீது டொனால்டு டிரம்ப் வழக்கு
    X

    செக்ஸ் புகார் கூறிய பெண்கள் மீது டொனால்டு டிரம்ப் வழக்கு

    செல்வாக்கு சரிவை தடுக்க தன் மீது ‘செக்ஸ்’ புகார் கூறிய பெண்கள் மீது டிரம்ப் வழக்கு தொடர உள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான இவர் பெண்களை அவமதித்து பேசியதாக வீடியோ வெளியானது.

    மேலும் இவர் மீது இதுவரை 11 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர். அதற்கு டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தும் வாக்காளர்களிடம் அவரது செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது.

    அதை தடுக்க தன் மீது ‘செக்ஸ்’ புகார் கூறிய பெண்கள் மீது வழக்கு தொடர டிரம்ப் முடிவு செய்துள்ளார். பென்சில் வேனியாவில் உள்ள கெட்டிஸ்பர்க் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது இதை அறிவித்தார்.

    “என் மீது சில பொய்யர்கள் செக்ஸ் புகார் கூறி வருகின்றனர். அதன் மூலம் எனது பிரசாரத்துக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது போன்று எப்போதும் நடந்ததில்லை. அவர்கள் மீது நான் வழக்கு தொடர இருக்கிறேன்” என்றார்.

    மேலும் அவர் பேசும் போது நான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் முதல் 100 நாளில் 2 கோடியே 50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். நடுத்தர மக்களின் வரிகளை நீக்குவேன்.

    முதன் முறையாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து குடியேறும் வெளி நாட்டினருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
    Next Story
    ×