search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதி 13 பேர் பலி
    X

    அமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதி 13 பேர் பலி

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுற்றுலா பஸ் டிராக்டர் மீது மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலை வழியாக தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு சுற்றுலா பஸ் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.

    பாஸ் ஏஞ்சலஸ் நகரின் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உள்ள பால்ம் பிரிங் நகரை நெருங்கியபோது முன்னால் சென்ற டிராக்டர் டிரைலர் வாகனத்தின்மீது அந்த பஸ் பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் முன்னால் சென்ற டிரைலரை கிழித்துகொண்டு பஸ் நுழைந்து நிற்கும் புகைப்படங்களுடன் இவ்விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்த விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×