search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள்
    X

    இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள்

    அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் மகள் விர்ஜினியாவில் உள்ள இந்து கோவிலில் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

    அவ்வகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோவிலில் தீபாவளி கொண்டாட உள்ளார். அவர் சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோவிலுக்கு புதன்கிழமை செல்லும்போது, அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோவிலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    கடந்த வாரம் குடியரசு இந்து கவுன்சில் சார்பில் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் வங்காளதேசத்தில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டார். இந்திய-அமெரிக்க நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் கலந்துகொண்டதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×