search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ பல்டி
    X

    அமெரிக்காவின் உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ பல்டி

    அமெரிக்கா உடனான உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
    மணிலா:

    ஆசிய கண்டங்களில் மிகவும் அரசியல் சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையேயான மறைமுகப் போர் உச்சநிலையை அடைந்திருக்கும் நேரம் இது. இதனிடையே தென் சீனக் கடல் விவகாரம் ஆசிய நாடுகளிடயே புதிய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    சீனாவின் பீஜிங் நகரில் பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அமெரிக்க உறவில் இருந்து பிரிந்து செல்வதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.

    அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் கூட்டுப்போர் பயிற்சியும் இனியும் கிடையாது என்று ரோட்ரிகோ தெரிவித்து இருந்தார்.

    இதனால் அமெரிக்கா உடனான உறவை முறித்து கொள்வதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்கா உடனான உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

    சீனாவில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு மீண்டும் பிலிப்பைன்ஸ் திரும்பிய பின்னர் மணிலா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

    இது குறித்து ரோட்ரிகோ கூறுகையில், “ நீண்ட நாள் கூட்டணி நாடான அமெரிக்காவுடன் அதிக அளவிலான உறவை வைத்து கொள்ள போவதில்லை என்று தான் கூறினேன். ஆனால் வெளியுறவுக் கொள்கையில் சீனா உடனான உறவை பலப்படுத்துவோம்” என்றார்.
    Next Story
    ×