search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டு நாள் பயணமாக அல்ஜீரியா சென்றார் ஹமீது அன்சாரி
    X

    இரண்டு நாள் பயணமாக அல்ஜீரியா சென்றார் ஹமீது அன்சாரி

    துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு இரண்டு நாள் பயணமாக அல்ஜீரியா நாட்டிற்கு சென்றார்.
    அல்ஜிரியாஸ்:

    துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஹங்கேரி மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு 5 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ஹங்கேரி பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக ஹமீது அன்சாரி அல்ஜீரியா நாட்டிற்கு சென்றார்.

    இந்த பயணத்தின் போது அல்ஜீரிய அதிபர் அப்தெலாஜிஸ் போட்டிபிளிகா, பிரதமர் அப்தெல் மலெக் ஷெலல் மற்றும் முக்கிய தலைவர்களை அன்சாரி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அப்போது எல்லைத்தாண்டிய தீவிரவாதம் குறித்த பிரச்னையை எழுப்ப உள்ளார். மேலும் இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    2001-ம் ஆண்டு குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அல்ஜீரியா அதிபர் போட்டிபிளிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×