search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேத்தில் பத்திரிகை ஆசிரியர், வலைத்தள எழுத்தாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
    X

    வங்காளதேத்தில் பத்திரிகை ஆசிரியர், வலைத்தள எழுத்தாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

    வங்காளதேசத்தில் ஓரினச் சேர்க்கையாளர் ஆதரவு பத்திரிகை ஆசிரியர் மற்றும் மதச்சார்பற்ற வலைத்தள எழுத்தாளர் ஆகியோரைக் கொலை செய்தவனை போலீசார் இன்று கைது செய்தனர்.
    டாக்கா:

    இஸ்லாமிய பழமைவாதிகளை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக வங்காளதேச சட்ட மாணவரும், மதச்சார்பற்ற வலைதள எழுத்தாளருமான நசிமுதின் சமத் (வயது-28), ஏப்ரல் 6-ம் தேதி தலைநகர் டாக்காவில் உள்ள பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் கொல்லப்பட்டார்.

    இதுபோல ஓரினச்சேர்க்கை ஆதரவு பத்திரிகையின் ஆசிரியர் சுல்ஹாஷ் மன்னன் என்பவர் ஏப்ரல் 25-ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டது வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இருவரும் கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இவர்கள் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் முக்கிய நபரான ரஷிதுன் நபி என்பவனை வங்காளதேச போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கோர்ட் குற்றம் சாட்டப்பட்ட நபியை மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட நபி, வங்காள தேசத்தின் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றான அன்சருல்லா பங்களா டீம் என்ற அமைப்பைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    Next Story
    ×