search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் ஐ.நா. சபையிடம் முறையிடுவோம்: பாகிஸ்தான்
    X

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் ஐ.நா. சபையிடம் முறையிடுவோம்: பாகிஸ்தான்

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் ஐ.நா. சபையிடம் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தை முறையிடுவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் அலுவலக வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:-

    ஒப்பந்தத்தை ரத்து செய்வது போர் போன்ற நடவடிக்கை ஆகும். இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தானாக விலக முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவிக்கிறது.

    ஒப்பந்தத்தை தானாக விலகுவது பாகிஸ்தானுக்கும், அதன் பொருளாதாரத்திற்கும் விடுக்கும் அச்சுறுத்தல் ஆகும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறினால் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தை முறையிடுவோம்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    முன்னதாக, பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிந்து நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
    Next Story
    ×