search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-ம் கட்ட இந்தியா-அமெரிக்கா சைபர் பாதுகாப்பு பேச்சுவார்த்தை: புதுடெல்லியில் இந்த வாரம் நடக்கிறது
    X

    5-ம் கட்ட இந்தியா-அமெரிக்கா சைபர் பாதுகாப்பு பேச்சுவார்த்தை: புதுடெல்லியில் இந்த வாரம் நடக்கிறது

    சைபர் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையிலான 5-ம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இந்த வாரம் நடைபெறவுள்ளது.
    வாஷிங்டன்:

    சைபர் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையிலான 5-ம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் இணைய பிரச்சனைகள் தொடர்பான துறையின் அதிகாரி கிரிஸ்டோபர் பெயிண்டர் தலைமையிலான குழு இந்தியா வருகிறது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, சைபர் கூட்டு ஒத்துழைப்பினை மேற்கொள்ளுதல், உள்கட்டமைப்பை பாதுகாக்க சைபர் கிரைம் மற்றும் தவறான சைபர் செயல்பாடுகளை ஒடுக்குதல் ஆகியவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    மேலும், இரு நாடுகளின் சைபர் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் இந்த பேச்சுவார்த்தையின் போது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சைபர் பாதுகாப்பில் இருநாடுகளின் உறவை தீவிரப்படுத்தவும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×