search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய வேண்டும்: நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா பதிலடி
    X

    பாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய வேண்டும்: நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா பதிலடி

    பலுசிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடும் பாகிஸ்தான், தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.
    நியூயார்க்:

    பலுசிஸ்தான் மக்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிடும் பாகிஸ்தான், தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக அபாண்டமாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், நேற்று அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-

    மற்ற நாடுகள் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள், தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டில் உள்ள பலுசிஸ்தானில் எத்தகைய அதிர்ச்சிகரமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளோம் என்று பார்க்க வேண்டும். பலுசிஸ்தான் மக்கள் மீதான கொடூர தாக்குதல்கள், அரசாங்க அடக்குமுறையின் மோசமான வடிவங்களாக உள்ளன.

    இன்று நம்மிடையே உள்ள சில நாடுகள், பயங்கரவாத மொழியை பேசுகின்றன. பயங்கரவாதத்தை பேணி பாதுகாக்கின்றன, ஏற்றுமதி செய்கின்றன. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது அவர்களின் வாடிக்கையாகி விட்டது. அத்தகைய நாடுகளை நாம் அடையாளம் கண்டறிந்து, அவர்களின் தவறுகளுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும். அவர்களுக்கு நாடுகளின் கூட்டமைப்பில் இடம் அளிக்கக்கூடாது.

    ஐ.நா.வால் ‘பயங்கரவாதி’ என அறிவிக்கப்பட்டவர்கள், இந்த நாடுகளில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஊர்வலம் நடத்துகிறார்கள். தங்கள் நச்சுக்கருத்துகளை போதித்து வருகிறார்கள். அந்த பயங்கரவாதிகளைப் போலவே, அவர்களுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகளும் குற்றவாளிகள்தான்.

    காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரை பெறவேண்டும் என்று கனவு காண்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.

    இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.
    Next Story
    ×