search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது: ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு சுஷ்மா பதிலடி
    X

    கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது: ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு சுஷ்மா பதிலடி

    கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது என்று ஐ.நா சபையில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

    இந்த கூட்டத் தொடரில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து இன்று உரையாற்றினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான். எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். பயங்கரவாத கருத்துக்களை விதைப்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாத்திற்கு பகதூர் அலி ஒரு உதாரணம். கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் மற்றவர்கள் மீது கல்லெறியக் கூடாது.

    தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து நாம் அனைவரும் போராட வேண்டும். இதற்கு சில நாடுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும்.

    தீவிரவாதிகளுக்கு யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளை எப்படி அவர்களால் செயல்படுத்த முடிகிறது?

    தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். யார் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் நிதி உதவி செய்கிறார்கள்?. இதே கேள்வி ஆப்கானிஸ்தானாலும் சில தினங்களுக்கு முன்பு கேட்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஐ.நா. பொதுசபை கூட்டத்தொடரில் சில தினங்களுக்கு முன்பு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மா சுவராஜின் இன்றைய பேச்சு அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
    Next Story
    ×