search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது: பூமியில் விழப்போகும் சீன விண்வெளி நிலையம்
    X

    கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது: பூமியில் விழப்போகும் சீன விண்வெளி நிலையம்

    2011-ம் ஆண்டு டியான்காங்-1 என்ற 8 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி உள்ளது. இந்த விண்கலத்தின் சில பகுதிகள் அடுத்த ஆண்டு மத்தியில் எரியாமல் பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
    பீஜிங்:

    சீனா விண்வெளியில் ஆய்வு மையம் ஒன்றை பெரிய அளவில் அமைக்க உள்ளது. 2022-ம் ஆண்டில் இது செயல்பட தொடங்கும்.

    அதற்கு முன்னோட்டமாக மாதிரி விண்வெளி மையங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. கடந்த வாரம் டியான்காங்-2 என்ற விண்வெளி மையத்தை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

    அதற்கு முன்னதாக 2011-ம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையம் அனுப்பப்பட்டது. 8 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் விண்ணில் சுற்றி தேவையான தகவல்களை அனுப்பியது

    ஆனால் இப்போது அது கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி உள்ளது. அது புவிஈர்ப்பு வட்டத்துக்குள் வந்து பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை சீனாவும் உறுதிப்படுத்தி உள்ளது.

    ஆனாலும், அடுத்த ஆண்டு மத்தியில் தான் இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அப்போது விண்வெளியில் காற்றுமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் அந்த விண்வெளி மையம் தீப்பிடித்து அதன் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனாலும், என்ஜின் உள்ளிட்ட சில பகுதிகளில் எரியாமல் பூமியில் விழும். இதனால் அது விழும் பகுதிகளில் ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் இதுபற்றி சீனா கூறும்போது, பூமியில் விழும் பாகங்கள் பெரும்பாலும் கடலில் தான் விழும். எனவே பூமிக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்தது.

    Next Story
    ×