search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 42 பேர் கடலில் மூழ்கி பலி
    X

    மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 42 பேர் கடலில் மூழ்கி பலி

    மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 42 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். 150 பேர் காப்பாற்றப்பட்டனர். 400 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
    கெய்ரோ:

    ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.

    அவர்கள் படகுகளில் மத்திய தரைக்கடல் பகுதியை கடந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். சிறிய படகுகளில் அதிக அளவில் அகதிகளை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படி செல்லும் படகுகள் கடலில் மூழ்கி ஏராளமானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எகிப்து நாட்டில் கபர்அல்சேக் என்ற இடம் அருகே கடலில் அகதிகளுடன் சென்று படகு ஒன்று மூழ்கியது. இந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 600 பேர் இருந்தனர்.

    படகு மூழ்கியதில் அவர்கள் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதை அறிந்த எகிப்து கடற்படையினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்குள் 42 பேர் மூழ்கி பலியாகி விட்டார்கள். அவர்கள் உடல்களை மீட்டனர். 150 பேர் காப்பாற்றப்பட்டனர். 400 பேரை காணவில்லை.

    அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

    Next Story
    ×