search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுடன் தீவிரமான, உறுதியான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்: ஐ.நா. சபையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு
    X

    இந்தியாவுடன் தீவிரமான, உறுதியான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்: ஐ.நா. சபையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு

    இந்தியாவுடன் தீவிரமான, உறுதியான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார் என்று ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதியான தீர்வு காண இந்தியாவுடன் தீவிரமான, உறுதியான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார். காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்மானம் எட்டும் வரை இருநாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதில் வெற்றி கொள்ள முடியாது.

    பேச்சுவார்த்தைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத முன் நிபந்தனைகளை இந்தியா முன்வைக்கிறது. பேச்சுவார்த்தை பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை.

    ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் பர்கன் வானி ஒரு இளம் தலைவர். இது புற நிகழ்வுகளை பற்றிய மதிப்பீடு தானே அன்றி பிரிவினை கருத்தாக்கம் அல்ல. தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் எங்களுடைய ஊகங்களை உறுதி செய்து வருகிறது.

    காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளிக்கிறது. காஷ்மீர் வன்முறை குறித்து சுதந்திரமான நீதி விசாரணை தேவை. ஐ.நா.வின் உண்மை அறியும் குழு காஷ்மீர் சென்று ஆராய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ஷெரீப் கூறினார்.
    Next Story
    ×