search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதத்தை பரப்புவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாக். மீது மோடி மறைமுக தாக்கு
    X

    தீவிரவாதத்தை பரப்புவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பாக். மீது மோடி மறைமுக தாக்கு

    ‘தீவிரவாதம் பரப்பப்படுவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என ஆசியான் மாநாட்டில் பாகிஸ்தான் மீது மோடி மறைமுகமாக தாக்கினார்.
    வியன்டின்:

    லாவோஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது தீவிரவாதம் பரப்பப்படுவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.

    ‘‘எல்லை தாண்டி பரப்பப்படும் தீவிரவாதம், அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் பரவிவரும் மிக அதிகமான வன்முறை போன்றவை நமது சமூகத்துக்கு இருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக திகழ்கிறது.

    வளர்ந்து வரும் பாரம்பரியம் மற்றும் பாரம்பரியம் அல்லாத சவால்களை எதிர்கொள்ள அரசியல் ஒத்துழைப்புதான் நமது உறவின் முக்கிய தூண் ஆகும். சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்றவற்றுக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

    எல்லை தாண்டி பரப்பப்படும் தீவரவாதம் என மோடி பேசியிருப்பதன் மூலம் கடந்த 2 நாளில் 2-வது தடவையாக அவர் பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

    சமீப காலமாக இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து சொற்போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 5-ந்தேதி ஜி-20 மாநாட்டில் பேசிய மோடி தெற்காசியாவில் தனிப்பட்ட ஒருநாடு தீவிரவாதத்தை பரப்பும் ஏஜெண்டு ஆக செயல்படுகிறது. அச்ச உணர்வை ஏற்படுத்தும் அந்த நாடு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு வெகுமதி அளிக்க கூடாது’’ என்றார். இன்று 2-வது தடவையாக பாகிஸ்தான் தீவிரவாதத்தை பரப்புவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று மறைமுகமாக தாக்கியுள்ளார்.
    Next Story
    ×