search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோனில் பதுக்கி வைத்த ரூ. 30 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோனில் பதுக்கி வைத்த ரூ. 30 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்

    ரூ. 30 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் சிக்கி இருப்பது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பண்ருட்டியில் உள்ள குடோன்களில் செம்மரக்கட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு குடோன் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனர். அதில் செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

    குடோனில் சோதனை செய்தபோது பஞ்சு மூட்டைகளுக்கு நடுவே செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    லாரி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அருகிலுள்ள மற்றொரு குடோனிலும் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து அந்த குடோனிலும் அதிகாரிகள் சோதனையிட்டு செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளையும் கைப்பற்றினர்.

    மொத்தம் 30 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். இது தொடர்பாக குடோன் உரிமையாளர்கள் பண்ருட்டியை சேர்ந்த ஒருவரிடமும், சென்னையை சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 4 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    அவர்களிடம் செம்மரக் கட்டைகள் எப்படி? கிடைத்தது. எங்கு கடத்தப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×