search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு திண்டுக்கல் நீதிபதி நூதன தண்டனை
    X

    விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு திண்டுக்கல் நீதிபதி நூதன தண்டனை

    திண்டுக்கல்லில் விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேவைப்பணி செய்ய திண்டுக்கல் கோர்ட்டு நூதன தண்டனை விதித்தது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் சரத்குமார் (வயது 23). டிரைவராக பணி செய்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு திண்டுக்கல்-பழனி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சரத்குமார் சென்ற போது சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதினார். இதில் அவர் உயிரிழந்தார். அப்போது சரத்குமாருக்கு 17 வயது என்பதால் இவ்வழக்கு திண்டுக்கல் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி கவிதா தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் விபத்தை ஏற்படுத்திய சரத்குமார் 2 வாரங்களுக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    தினமும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து மதிய சாப்பாடு இடைவேளை முடிந்து பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சேவைப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இதற்கான பதிவேட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி சரத்குமார் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    Next Story
    ×