search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்னை ஏமாற்றிய கிராம நிர்வாக அதிகாரி மீது வழக்கு
    X

    திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்னை ஏமாற்றிய கிராம நிர்வாக அதிகாரி மீது வழக்கு

    முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏவூர் கிராம நிர்வாக அலுவலர் மீது இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முசிறி:

    முசிறியை சேர்ந்தவர் இளம்பெண் தீபா (வயது22). இவர் முசிறி தனி தாசில்தார் அலுவலகத்தில் தற்காலிக கம்பயூட்டர் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். முசிறி அருகே உள்ள சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி (25). இவர் ஏவூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் தீபா ஏவூர் கிராம நிர்வாக அலுவலர் சஞ்சீவி தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும், கருக்கலைப்பு செய்ய மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் கருக்கலைந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கேட்டும், திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்து எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

    தன்னை ஏமாற்றிய கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுத்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீராபாய் கிராம நிர்வாக அலுவலர் சஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×