search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு ரெயில் பயணிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டும்: முத்தரசன்
    X

    மத்திய அரசு ரெயில் பயணிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டும்: முத்தரசன்

    மத்திய அரசு ரெயில் பயணிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரெயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகையை பறிக்கும் வகையில், மூத்த குடிமக்கள் வயது வரம்பை பெண்களுக்கு 58-லிருந்து 68 ஆகவும், ஆண்களுக்கு 60-லிருந்து 70 ஆகவும் உயர்த்துவதற்கு ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னர் நடைமேடை கட்டணத்தை ரூ.5-லிருந்து 10 ஆக உயர்த்தியது, தொடர்ந்து சாதாரண தொடர் வண்டிகளை அதிவிரைவு வண்டி என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தியது.

    படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பயணச் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து, தட்கல் பயணச் சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தது.

    இதன் மூலம் கடுமையான கட்டண உயர்வு செய்யப்பட்டது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச் சீட்டுகள் ரத்து செய்யும் கட்டணத்தை ரூ.60 ஆக உயர்த்தியது.


    உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை ரத்து செய்யும்போது இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடைசி 4 மணி நேரத்தில் ரத்து செய்தால் முழுக் கட்டணத்தையும் இழந்து விட வேண்டிய அவலநிலை உள்ளது.

    இது தவிர சிறப்பு ரெயில்கள் என்ற பெயர்களில் கடுமையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இப்படி தொடர்ச்சியாக மக்கள் தலைமையில் கடுமையான கட்டணச் சுமையை ஏற்றி வரும் மோடியின் மத்திய அரசு பயணிகள் விரோத கொள்கையை கைவிட்டு, லட்சக்கணக்கான ரெயில் பயணிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசையும், ரெயில்வே அமைச்சகத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுளளார்.

    Next Story
    ×