search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெப்ப பகுதியிலும் விளையும் ஆப்பிளுடன் ஸ்ரீலட்சுமி.
    X
    வெப்ப பகுதியிலும் விளையும் ஆப்பிளுடன் ஸ்ரீலட்சுமி.

    வெப்ப பகுதியிலும் விளையும் ஆப்பிள்: புதுவை பெண் கண்டுபிடித்தார்

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை வெப்பம் மிகுந்த கடலோர பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என்பதை ஸ்ரீலட்சுமி சாதித்து காட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வேங்கடபதி ரெட்டியார். (வயது 70). 4-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர், வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கனகாம்பர பூக்களில் புதிய ரகங்களை விளைவித்து அதிசயத்தை ஏற்படுத்தினார். இதனால் அவரை கனகாம்பர ரெட்டியார் என்று பலர் அழைத்து வந்தனர்.

    அதன் பின்னர் சவுக்கை, கரும்பு போன்ற பயிர்களில் குறைவான காலத்தில் அதிகப்படியான விளைச்சலை தரக்கூடிய வகைகளை உருவாக்கினார்.

    தொடர்ந்து வேங்கடபதி ரெட்டியார் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய வகை கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக சமீபத்தில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

    தற்போது வேங்கடபதி ரெட்டியாரின் வழியில் அவரது மகள் ஸ்ரீலட்சுமியும் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் விளைவாக ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை வெப்பம் மிகுந்த கடலோர பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என்பதை சாதித்து காட்டி உள்ளார்.

    இவர் விளைவித்த ஆப்பிள் குளிர்பிரதேசத்தில் விளையக்கூடிய ஆப்பிளுக்கு நிகராக அதிக சாறு நிறைந்ததாகவும், சுவை மிகுந்ததாகவும் உள்ளது. இவர் உருவாக்கி உள்ள ஆப்பிள் மரத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்துள்ளன.

    இதன் மூலம் ஆப்பிள் வகைகளை கிராபிட்டிஸ் செய்து இனவிருத்தி செய்ய முடியும் என ஸ்ரீலட்சுமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் உருவாக்கி உள்ள ஆப்பிள் மரத்தை புதுவை கவர்னர் மாளிகையில் நட்டு பொதுமக்கள் பார்வையிடவும் முடிவு செய்துள்ளனர்.

    இது தவிர, ஸ்ரீலட்சுமி 2 அடி உயரம் கொண்ட கத்தரிக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளையும் விளைவித்து வியக்க வைத்துள்ளார்.

    8 வயது முதலே தனது தந்தையின் வேளாண் ஆராய்ச்சிக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்து வந்த ஸ்ரீலட்சுமி தற்போது தானும் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆப்பிள் மற்றும் காய்கறி போன்றவற்றை புதிய யுக்திகளை கொண்டு உருவாக்கி வரும் அவரது சாதனைகள் மேலும், மேலும் உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.



    Next Story
    ×