search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்பொருள் அங்காடியில் பொருட்கள் எரிந்து சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    பல்பொருள் அங்காடியில் பொருட்கள் எரிந்து சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

    தியாகதுருகத்தில் இன்று காலை பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
    தியாகதுருகம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் புக்களம் பஸ்நிலையம் அருகில் வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணியளவில் பணி முடிந்ததும் அவர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த பல்பொருள் அங்காடியில் இருந்து புகைமூட்டம் வெளியே வந்தது.

    ரோட்டின் நடந்து சென்றவர்கள் பல்பொருள் அங்காடியில் புகை வருவதை பார்த்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி ஜமுனா ராணி தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இரும்பு ‌ஷட்டரை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்தில் உள்ளே இருந்த மளிகைப்பொருட்கள், அரிசி மூட்டைகள், வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அதில் மின்கசிவு காரணமாக பல்பொருள் அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



    Next Story
    ×