search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு
    X

    தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு

    தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர், வெளி மாவட்ட பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையை ஒட்டி பெரியகோவிலுக்கு அதிகாலை முதல் இரவு வரை வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வர்.

    பெரிய கோவிலின் நுழைவு வாயிலின் வலதுபுறம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இப்பகுதியில் திடீர் என தீப்பற்றியது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், குழந்தைகள் பதற்றமடைந்தனர்.

    உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் பெரியகோவிலுக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணிநேர போராட்டத்துக்குப்பின் தீ முற்றிலும் தடுத்து அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது அப்பகுதியில் கூடுகட்டியிருந்த வி‌ஷ வண்டுகளை விரட்ட சிலர் தீ மூட்டியபோது அது பரவி தீவிபத்து ஏற்பட்டதாகவும், அப்பகுதியில் சேர்ந்திருந்த குப்பைகளை எரிக்க தீ வைத்தபோது அது காற்றில் பரவி தீப்பற்றியதாகவும் முரண்பட்ட தகவல் வெளியானது. இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் கவனக்குறைவாக தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×