search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைகளை மூடக்கோரி 16 இடங்களில் பா.ஜ.க. முற்றுகை: 1200 பேர் கைது
    X

    மதுக்கடைகளை மூடக்கோரி 16 இடங்களில் பா.ஜ.க. முற்றுகை: 1200 பேர் கைது

    நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் இன்று டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 1200 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    தமிகம் முழுவதும் மதுக்கடைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் இன்று டாஸ்மாக் மதுக்கடைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை டவுன், பாளை மகிழ்ச்சி நகர் மற்றும் அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம் உள்ளிட்ட 16 இடங்களில் உள்ள மதுக்கடைகள் முன்பு முற்றுகை, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இதனால் அந்தந்த பகுதி மதுக்கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை டவுன் ஏ.பி. மாடத்தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு இன்று காலை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டு வந்தனர்.

    போராட்டத்திற்கு மாநில தொழில் பிரிவு செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் அழகு ராஜ், எஸ்.வி.குருசாமி, வேல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை பிரிவு முருகதாஸ், டாக்டர் தீபா, இளைஞரணி ராஜா, சரவணன், கார்த்திக், மாரியப்பன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். அவர்கள் மதுக்கடைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். பாளை பெருமாள்புரம் மகிழ்ச்சி நகர் மதுக்கடை முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சுரேஷ், மணிகண்டன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதில் 100-க்கும் மேற்பட் டோரை போலீசார் கைது செய்தனர். இதே போல ராதாபுரத்தில் மாநில விவசாய அணி நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வினர் நடத்திய போராட்டத்தில் சுமார் 1200 பேர் கைது செய்யப்பட்டார்கள். பா.ஜ.க.வினர் போராட்டம் காரணமாக அந்தந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மதியம் ½ மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது.
    Next Story
    ×