search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    22-ந் தேதி அனைத்து கட்சி பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில்  22 தலைவர்கள் பங்கேற்பு
    X

    22-ந் தேதி அனைத்து கட்சி பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் 22 தலைவர்கள் பங்கேற்பு

    சென்னை மயிலை மாங்கொல்லையில் 22-ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

    சென்னை:

    விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டம் பற்றிய விளக்க பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.


    தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ். திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சிதலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் பொதுக் கூட்டத்தில் சிறைப்புரையாற்றுகிறார்கள்.

    கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதய ராஜ், பேராயர் எஸ்றா சற்குணம், பொன்.குமார், அதியமான், திருப்பூர் அல்தாப், பி.வி.கதிரவன், ஓய்வு பெற்ற ஐ.எஸ்.அதிகாரி சிவகாமி, பஷீர் அகமது, பி.எம்.அம்மாசி ஆகிய தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×