search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்த்தில் 5-ந்தேதி வணிகர்கள் மாநாடு: விக்கிரமராஜா அறிவிப்பு
    X

    விழுப்புரத்த்தில் 5-ந்தேதி வணிகர்கள் மாநாடு: விக்கிரமராஜா அறிவிப்பு

    விழுப்புரத்த்தில் 5-ந்தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறும் என்று மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் செர்மனி ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது.

    சென்னை மண்டலத் தலைவர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா வரவேற்றார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.மோகன் மே-5 மாநில மாநாடு குறித்து தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே-5 அன்று 34-வது வணிகர் தின மாநில மாநாடு இந்திய வணிக வளர்ச்சி மாநாடாக விழுப்புரத்தில் நடைபெறுகிறது.

    மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதற்காக விழுப்புரம் பைபாஸ் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் அகில இந்திய வணிக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதில் சென்னை மண்டலத்தில் உள்ள தென் சென்னை மேற்கு, தென் சென்னை கிழக்கு, மத்திய சென்னை, வட சென்னை மேற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு மாவட்டங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களின் சார்பில் 1 லட்சம் வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மே-5 அன்று கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    * உள்நாட்டு வணிகத்துக்கும், சில்லறை வணிகத்துக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் கோடிக் கணக்கான வணிக குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதத்தில் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    * பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் ஏப்ரல் 1 முதல் வங்கியில் பணம் எடுக்கவும், பணம் போடவும் புதிய கட்டணங்கள் விதித்துள்ளன. இதை கண்டித்து மே 5-ந்தேதி அன்று வங்கிகளை புறக்கணித்து, அன்றைய தினம் வங்கி பரிமாற்றம் எதையும் மேற் கொள்வதில்லை என்று வணிகர் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் கே.ஜோதிலிங்கம், என்.டி.மோகன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், என்.ஜெயபால், ஆதிகுருசாமி, ரவி முன்னிலை வகித்தனர்.

    இதில் இளைஞரணி ஐ.பால் ஆசீர், பூவை கந்தன் இ.எம்.ஜெயக்குமார், பூவை ஜெயக்குமார், மாநில இணை செயலாளர் எம்.கிருஷ் ணன், மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன், பொருளாளர் வினோத் குமார் பாபு, மாவட்ட இணை செயலாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திரன், ராமசாமி, தென் சென்னை தேசிகன், சின்னவன், கர்ணன், துரை, பாலன் செந்தில்குமார், பி.டி.சேகர், வெற்றி, மார்க்கெட் சிவா, முனியாண்டி, மகேஸ்வரன், ஆர்.எம்.பழனியப்பன், அருணாசலமூர்த்தி, ஜெயராமன், பொன்சேகர், சங்கர், எம்.பி.ரமேஷ், ஆவடி அய்யார்பவன் அய்யாத் துரை, அம்பத்தூர் ஹாஜி முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×