search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில் ஏற்றி வந்த மினி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி
    X
    மதுபாட்டில் ஏற்றி வந்த மினி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி

    டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: மதுபாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரி சிறைபிடிப்பு

    டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மது பாட்டில்கள் கொண்டு வந்த அந்த வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே உள்ளது ஆத்துமேடு. இந்த பகுதியில் நேற்று இரவு டாஸ்மாக் கடை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் நள்ளிரவு டாஸ்மாக் ஊழியர்கள் அந்த இடத்தில் மினி டெம்போவில் மதுபாட்டில்களை கொண்டு வந்து இறக்க முயற்சி செய்தனர்.

    அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஒருவர் இதனை பார்த்தார். உடனே அவர் ஊருக்குள் சென்று பொதுமக்களை திரட்டிக் கொண்டு அங்கு வந்தார். பின்னர் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மது பாட்டில்கள் கொண்டு வந்த அந்த வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    சிறைபிடிக்கப்பட்ட வாகனத்தை காலை வரை விடாமல் அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று விடாப்பிடியாக இருந்தனர். இதனால் அதிகாரிகளின் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நீடித்தது.

    பின்னர் அதிகாரிகள், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.

    அதன் பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட வாகனமும் அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டது.





    Next Story
    ×