search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட சங்கீதா
    X
    கொலையுண்ட சங்கீதா

    ஆத்தூர் அருகே ரிக் அதிபர் மனைவி கொலையில் வாலிபர் கைது

    ஆத்தூர் அருகே ரிக் அதிபர் மனைவி கொலையில் வாலிபரை ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் அருகே உள்ள விநாயகபுரம் தெற்கு காடு நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி, ரிக் அதிபர். இவருடைய மனைவி சங்கீதா (வயது 37).

    இவர் கடந்த 26-ந்தேதி பகலில் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை குறித்து ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வாலிபர் ஒருவரை கைது செய்தனர். அவரது பெயர் ஜெயவேல் (34). சேலம் மாவட்டம் வீராணத்தை அடுத்த கங்காபுதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடை கடையாக சென்று சோடா சப்ளை செய்து வந்தார்.

    இவர் விநாயகபுரம் அருகே ஒரு கடையில் சோடா சப்ளை செய்தபோது ஜெகதீஷ் என்ற வாலிபருடன் ஜெயவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஜெகதீஷ் சங்கீதாவை அறிமுகப்படுத்தினார். சங்கீதாவின் செல்போன் எண்ணையும் கொடுத்தார்.

    ஜெயவேல் அடிக்கடி சங்கீதாவுடன் பேசி தொடர்பை வளர்த்துக் கொண்டார்.

    கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். அவர் உல்லாசமாக இருப்பதற்காக அடிக்கடி சங்கீதா ஜெயவேலுக்கு பண உதவிகளையும் செய்து வந்தார். வீட்டை அடமானம் வைத்துள்ளதாகவும் அதற்காக ரூ. 3 லட்சம் தேவைப்படுவதாகவும் ஜெயவேல் கூறினார். எனவே அவருக்கு ரூ. 3 லட்சத்தை சங்கீதா கொடுத்தார்.

    சம்பவத்தன்று மதுபாட்டிலுடன் ஜெயவேல் சங்கீதா வீட்டிற்கு சென்றார். அப்போது ஆட்டுக்கறி சமையல் செய்து 2 பேரும் மது அருந்திவிட்டு சாப்பிட்டனர். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர்.

    ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் ஜெயவேலால் சங்கீதாவை திருப்திப்படுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதா ஜெயவேலிடம் நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா? ஒரு பெண்ணை திருப்தி படுத்தக்கூட முடியாத உனக்கு ஆண்மகன் பட்டம் தேவையா? என்று கோபமாக கேட்டார். ஏற்கனவே மது போதையில் இருந்த ஜெயவேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் சங்கீதாவை ஜெயவேலு பிடித்து தள்ளினார்.

    அப்போது அவரது தலை கதவு நிலையில் பட்டு அவர் கீழே விழுந்தார், அவர் மீது அமர்ந்து கொண்டு ஜெயவேல் ஆத்திரம் அடங்காமல் சங்கீதாவின் தலையை மீண்டும் பலமுறை தரையில் அடித்தார். இதில் பின்பக்க தலையில் அடிபட்டு அவர் இறந்தார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுவதற்காக வி‌ஷ பாட்டிலை சங்கீதாவின் கையில் வைத்து விட்டு ஜெயவேல் ஊருக்கு சென்றுவிட்டார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் ஊரில் இருந்தார்.

    சங்கீதாவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி ஜெயவேலை பிடித்து விசாரித்தபோது சங்கீதாவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

    சங்கீதாவை கொன்றது குறித்து பரபரப்பான வாக்குமூலத்தை அளித்தார். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

    Next Story
    ×