search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் விவசாய சங்க பிரதிநிதி அரை நிர்வாண போராட்டம்
    X

    நாமக்கல்லில் விவசாய சங்க பிரதிநிதி அரை நிர்வாண போராட்டம்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல் மாவட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதி அரை நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாமக்கல்:

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு ஆதரவாக நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் தங்க சண்முகசுந்தரம் நாமக்கல் பூங்கா சாலையில் கோவணத்துடன் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் வாதநாராயண மரத்தின் இலைகளை ஆடைகளாக அணிந்து கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூரில் மண் திண்ணும் போராட்டம், திருச்சியில் முள்கிரீடம் அணிந்து போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது நாமக்கல்லில் விவசாயிகளுக்கு சோறு சாப்பிட வழியில்லை. எனவே இலைகளை சாப்பிட்டு விட்டு, சாக போகிறார்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக போராட்டம் நடத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து மனு கொடுத்தார். தன்னந்தனியாக விவசாய சங்க பிரதிநிதி நடத்திய இந்த போராட்டம் நேற்று பூங்கா சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×