search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
    X

    நெல்லை அருகே சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன

    நெல்லை அருகே நேற்று மதியம் 3 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்து விழுந்தன.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள கருங்காடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். தற்போது வழை மரங்கள் வளர்ந்து குலை தள்ளும் பருவத்தில் உள்ளன. சில தோட்டங்களில் வாழைகள் குலை தள்ளியுள்ளன.

    இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் கருங்காடு பகுதியில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. இதனால் வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து கருங்காட்டை சேர்ந்த விவசாயி சண்முக சுந்தரம் கூறும்போது, ‘பல லட்ச ரூபாய் செலவு செய்து வாழை பயிரிட்டிருந்தோம். நேற்று அடித்த சூறைக்காற்றால் வாழைகள் அனைத்தும் சாய்ந்து விட்டன. இந்த பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் வாழைகளுக்கு மேல் பயிரிடப்பட்டிருந்தன. தற்போது இந்த வாழைகள் அனைத்தும் சேதமாகி விட்டன. இதனால் விவசயிகளுக்கு ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    சேதமான வாழைகளை வருவாய்த்துறையினர் இன்று பார்வையிட உள்ளனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×