search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
    X

    ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

    ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. மாநிலம் முழுவதும் வறட்சி காணப்படுகிறது.

    நிலத்தடி நீர் குறைவால் மார்ச் மாதத்திலேயே வெயில் கடுமையாக கொளுத்துகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெயில் கொடுமையில் மக்கள் அவதிப்படுகிறார்கள்.சில மாவட்டங்களில் இப்போதே வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது.

    இந்த நிலையில் இயல்பைவிட ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் மாலை மலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடை வெயில் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சகட்டமாக இருக்கும். இயல்பை விட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும்.

    பரமத்தி வேலூரில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. கடலோர மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில சிறிய அளவில் மழை பெய்வதால் வெயிலின் தன்மை குறைவாக இருக்கிறது.

    சென்னையில் இப்போதே வெயில் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். முழுமையான வெயில் இன்னும் தொடங்க வில்லை. கடந்த ஆண்டை விட இந்த கோடை வெயில் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×