search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு
    X

    திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு

    திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி மத்திய சிறைச்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர்.

    இந்த நிலையில் நேற்று திருச்சி சிறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கைதி மணி என்பவரிடம் விசாரணை நடந்தது. இந்த இடத்தின் அருகிலேயே கேண்டீன் உள்ளது.

    அப்போது கேண்டீனில் பொருட்கள் வாங்குவதற்காக சிறையின் கோபுர வாசல் அருகே உள்ள அறையில் தங்கியிருந்த கைதிகள் பைசல்கான், பெத்தபெருமாள், மணி ஆகியோர் வந்தனர்.

    இதற்கிடையே அந்த பகுதிக்கு ரோந்து வந்த சிறை அதிகாரிகள் அருண் பாண்டியன், பாபு ஆகியோர் கைதிகளிடம் வீடியோ கான்பரன்சிங் அறையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டார்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த கைதிகள் பைசல்கான், பெத்தபெருமாள், மணி ஆகியோர் சிறை அதிகாரிகளை கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கினர். இதில் அவர்களின் சட்டை கிழிந்தது.

    மேலும் 2 அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதைப் பார்த்து அங்கு ஓடிவந்த சிறை வார்டன்கள் கைதிகளிடம் இருந்து அதிகாரிகளை மீட்டனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் பைசல் கான், பெத்தபெருமாள், மணி ஆகிய 3 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி சிறையில் கைதிகளால் அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×