search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஒ.பி.எஸ். அணி உண்ணாவிரதம்: ஓம்சக்தி சேகர் தலைமையில் நடந்தது
    X

    புதுவையில் ஒ.பி.எஸ். அணி உண்ணாவிரதம்: ஓம்சக்தி சேகர் தலைமையில் நடந்தது

    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று புதுவையில் ஓம்சக்தி சேகர் தலைமையில் ஒ.பி.எஸ். அணியினர் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் தலைமையில் ஒ.பன்னீர் செல்வம் அணியினர் செயல்பட்டு வருகிறார்கள்.

    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஒ.பி.எஸ். அணியினர் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    அதே போல புதுவையிலும் ஒ.பி.எஸ். அணி சார்பில் உண்ணா விரதம் நடந்தது.

    குயவர்பாளையம் சாரம் பாலம் அருகே அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர், வெங்கடசாமி,மருத்துவ அணி செயலாளர் டாக்டர் நன்னன், மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள், வக்கீல் பிரிவு செயலாளர் குணசேகரன் மற்றும் பிரமுகர்கள் விஜயலட்சுமி, இந்திரா முனுசாமி, சொக்கலிங்கம், மாசிலா குப்புசாமி, ஊசுடு செல்வ ராஜ், ராமலிங்கம், முருக தாஸ், லட்சுமணன், ஆறுமுகம், அய்யப்பன், கோவிந்தராஜ், அனிதா கணேசன், பட்டு, சவுரி நாதன், மகேஸ்வரி, பூங்கோதை, வெரோனிக்கா, கமலா, நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. சிலர் தங்கள் சொந்த நலனுக்காக, பதவி ஆசைக்காக ஜெயலலிதாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டதாக சந்தேகிக்கிறோம். எனவே. தான், அவர் மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம்.

    நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்பதால் இப்போது தமிழக அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஏய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்ககைளை பெற்று அமைச்சர் விஜய பாஸ்கரும், சுகாதார செயலாளரும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அவற்றில் கூட ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அப்பல்லோ அறிக்கையில் அவர் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் குணமடைந்து இட்லி சாப்பிட்டார் என்று கூறி இருக்கிறார்கள்.

    ஆனால் எய்ம்ஸ் அறிக்கையில் அவர் 3 நாட்களாக மயங்கிய நிலையில் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலை தெரிய வரும். அதுவரை தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரதத்தில் பல்வேறு நிர்வாகிகளும், பிரமுகர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் கணேசன் நன்றி கூறுகிறார்.

    Next Story
    ×