search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்படும்: தமிழிசை
    X

    மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்படும்: தமிழிசை

    ஹைட்ரோ கார்பன் திட்டம் பூதாகரமாக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என தமிழிசை கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜனதா செயல் வீரர்க்ள கூட்டம் இன்று நடந்தது.இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சிறப்பாக பயின்று நீட் தேர்வு எழுதினால் டாக்டர் ஆகலாம். கடந்த ஆண்டு 8 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டு 10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

    இதனை பார்க்கும் போது கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வை வரவேற்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. துரதிருஷ்டவசமாக தமிழக மாணவர்கள் நீட் தேர்வு குறித்து குழப்பத்தில் உள்ளனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் பூதாகரமாக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அங்கு மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இங்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தை அப்பகுதி மக்கள் விரும்பாவிட்டால் தடை செய்யப்படும். 2008-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்த திட்டத்துக்கு தி.மு.க. தான் அனுமதி கோரியது. ஆனால் தற்போது தி.மு.க. எதிராக போராட்டம் நடத்துகிறது.

    தமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்து வருகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இதனை மக்கள் எதிர்ப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும்.

    உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா மாற்று கட்சியாக உருவெடுக்கும். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது.


    நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது தி.மு.க. அமைதியாக இருந்திருந்தால் இந்த ஆட்சி அமைந்திருக்காது. ஜெயலலிதா மரணம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும் என்று கூறும் பன்னீர் செல்வம் அவர் பதவியில் இருந்த போது அதற்கு உத்தரவிட்டு இருக்கலாமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் செயல் வீரர்கள் கூட்டத்துக்கு தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநகர தலைவர் விநாயகம் வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணை தலைவர் அரசகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பி.ஜெய்சதீஷ், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ஐயாறப்பன் ஆகியோர் பேசினர்.

    முடிவில் மாவட்ட பொதுசெயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×