search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
    X

    கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

    கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்த ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்களை பறித்து சென்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நாகை மீனவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவர்களும் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்த அன்பு என்பவருக்கு சொந்தமான படகில் அவரது மகன் குணபால் மற்றும் ஆறுமுகம், பாலா, லட்சுமணன், கேசவன் ஆகியோர் கடந்த 24-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது 3 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், குணபால் உள்பட மற்ற மீனவர்களையும் தாக்கினர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட பொருட் களை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. அதன்பின்னர் நாகை மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர்.

    இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து நாகை மீனவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×