search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு: தமிழக மக்களை முட்டாளாக்கும் அமைப்புகள்- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு: தமிழக மக்களை முட்டாளாக்கும் அமைப்புகள்- பொன்.ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது. அந்த திட்டம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் யாராக இருந்தாலும் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

    எந்த திட்டம் கொண்டு வந்தாலும் வேண்டாம் என்று சொன்னால் அதன் விளைவு தான் என்ன? ஆழ்ந்து சிந்திக்காமல் அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசின் திட்டங்களை சிலர் எதிர்க்கிறார்கள்.

    தமிழர்களை முட்டாளாக்கும் வேலைகளில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதனை மக்கள் நம்பக்கூடாது.

    காமராஜர் ஆட்சியின் போது தான் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அணைகளும் உருவாக்கப்பட்டன. அவ்வாறு அணைகள் கட்டப்படாவிட்டால் இப்போது தமிழகம் மிகப்பெரும் தண்ணீர் பிரச்சினையில் சிக்கி இருக்கும். காமராஜருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வில்லை.

    கடந்த 50 ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டன. இதில் கருணாநிதி, ஜெயலலிதா மட்டுமின்றி தி.மு.க.வின் இப்போதைய செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கும் பங்கு உண்டு.

    தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். இதை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அரசும் இதற்கு எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×