search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,760-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை ரூ.168 உயர்ந்து பவுன் ரூ.22,760-க்கு விற்கப்படு கிறது.

    தங்கம் விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 552 ஆக இருந்தது. மறுநாள் (22-ந்தேதி) பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 624-க்கு விற்றது.

    நேற்று ரூ.32 குறைந்து ரூ.22 ஆயிரத்து 592 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 760 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.21 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,845-க்கு விற்கப்படுகிறது.

    சர்வதேச சந்தை நிலவரம், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.625 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 680 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.46.70-க்கு விற்கிறது.
    Next Story
    ×